பிரிவு, உறவின் கிரேக்க கொடை,
உள்ளிருந்து கொல்வதனால்.
பிரிவு, இறுதி இரவான இறப்பிற்கு
ஓர் ஒத்திகை.
வானவீதியில் வாழும் மனங்களை
வீசி பிடித்து தரையில் தள்ளும் பாசக்கயிறு.
அசையாது நகரும் நினைவென்னும் எருது பூட்டி
காலன் செய்யும் அறுவடை காலம்.
வினாடி நேர விம்மலான நட்பினில் இணைந்தவரை,
புயல் போல வீசி விலக்கிடும் காலத்தின் கொடூரம்.
ஆம், விதி இயற்றும் விதிகளுக்கு நானும் விதிவிலக்கல்ல.
எந்நேரமும் கிளை விட்டு செல்லும் கால விருட்சம்
சற்றே இணைத்த கிளைகளில் வாழ்ந்த கிளிகள் நா ம்.
சிறகு விட்டு பறந்தால் இணை பிரிய நேருமோ என்று
சிறகின்றி சிகரம் தொடும் நட்பினர் நாம்.
பிரிவரிய விரும்பா பறவைகளின் நிரந்தர போட்டியில்
தோற்றும் பிரிய விரும்பா ஓர் பிரிவினர் .
கடமையென்றும் கட்டுபாடென்றும் கண் கட்டு வித்தை செய்து
கல்லால் அடித்தாலும்
நினைவென்னும் காயங்களை
சுமக்க விரும்பும் கிளிகள் நாம் .
ஒத்திகை பார்த்தால் நாடகம் நன்றாய் வருமென்று
பிரிவுபசார நாடகமாடும் பிரியா நட்பினர் நாம்
கண்டு பிரியும் நாளெல்லாம் மீண்டும் காண நாள் குறித்து
நாட்காட்டி தாள்களில் வாழும் நினைவுகள் நாம்.
Translation,please.
ReplyDeleteHere you go. http://jeys-abode.blogspot.in/2014/03/friendships-and-farewells.html
ReplyDelete